பில்லா 2 இசை – ரஜினி வெளியிடுகிறார்? பில்லா 2 படத்தின் இசை ஏப்ரல்
இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இப்போது மேலும ஒரு
வாரம் தள்ளிப் போகிறது. இதன்படி வரும் மே 1 ம் தேதி அஜீத்தின் பிறந்த
நாளில் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில்
கூறப்பட்டுள்ளது. பில்லா 2-ன் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங...்கியுள்ளது.
மொத்தம் ஆறு பாடல்கள். படத்துக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா இந்தப்
படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இசைவெளியீட்டு
விழாவை ஆரம்பத்தில் பெரிய நிகழ்ச்சியாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இப்போது ரஜினி வீட்டில் அல்லது மண்டபத்தில் எளிய நிகழ்ச்சி மூலம்
இந்த ஆடியோ வெளியீடு நடக்கும் எனத் தெரிகிறது. சக்ரி டோலெட்டி இயக்கத்தில்
உருவாகியுள்ள பில்லா 2 மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைகிறது பிரபல
வர்த்தக நிறுவனமான இந்துஜா குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment